×

தமிழ் மொழியை காக்க முதல்வர் அயராது உழைத்து வருகிறார்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, ஏப்.16: காரைக்குடியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி, நகராட்சி சேர்மன் முத்துத்துரை, துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், தமிழ் மொழி, இனத்தை காக்க அண்ணா, கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார்கள். இளைய சமுதாயத்தினரிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. பேச்சு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் சொல்ல வந்த கருத்துக்களையும், உச்சரிப்பும் தெளிவாக இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் இளைஞர்களின் நலன்காக்கவும், அவர்களை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இப்பேச்சு போட்டிகளை நடத்த இந்த நிதி ஆண்டில் ரூ.ஒரு கோடி ஒதுக்கி உள்ளார்கள். திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா, பதிவாளர் ராஜமோகன், கலைக்கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், காரைசுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆபிதீன், முனைவர் கலாகாசிநாதன், நகர்மன்ற உறுப்பினர் தெய்வானைஇளமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழ் மொழியை காக்க முதல்வர் அயராது உழைத்து வருகிறார்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,KR Periyakaruppan ,Karaikudi ,State Minorities Commission ,Collector ,Madhusudhanreddy ,
× RELATED காரைக்குடியில் என்என்எல் டிரைவ்...