×

பாடாலூர் அருகே சில்லக்குடி அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

பாடாலூர், ஏப்.16: ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சில்லக்குடி ஒன்றிய கவுன்சிலர் கர்ணன் உபகரணங்களை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா, சில்லக்குடி சுப்பையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சோலைமுத்து, ஜோதி செல்வராஜ், காரைப்பாடி முருகையன், மேத்தால் தங்கவேல், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பாடாலூர் அருகே சில்லக்குடி அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Chillakudy Govt School ,Padalur ,Chillakudy Panchayat Union Primary School ,Aladhur Taluk ,Perambalur ,Chillakudi Government School ,Dinakaran ,
× RELATED பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி