×

மாநகராட்சி பள்ளி ஆண்டு விழா

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் கந்தசாமி லே-அவுட் மாநகராட்சி துவக்கப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா வரவேற்று பேசினார். கொ.ம.தே.க. நிர்வாகி மாடி கோயில் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், கொங்கு நண்பர்கள் சார்பில் கொங்கு பழனிச்சாமி, ரங்கராஜ், நாகராஜ், ராஜேந்திரன், பால விநாயகர் கோவில் கமிட்டி கண்மணி, காமராஜ் பேரவை மாநில தலைவர் பூமிநாதன் மற்றும் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Corporation School Annual Festival ,Tirupur ,Kandaswamy Layout Corporation Primary School ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்