×

கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா இருமாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்: அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்கள் கோரிக்கை

கூடலூர், ஏப். 16: கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா மே 5ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை குமுளியில் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டு பழமையும், சரித்திரப்புகழும் வாய்ந்த கண்ணகி கோயில், தேனி மாவட்டம் கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலயப்பகுதியில் 4830 அடி உயரத்தில் உள்ளது. இந்த கண்ணகி கோயிலின் முகப்பு வாயில், மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயில், கண்ணகி கோயில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள வனப்பகுதி கொக்கரக்கண்டம் வழியாக கோயிலுக்கு சாலை அமைத்த கேரள அரசும் கண்ணகி கோயிலை சொந்தம் கொண்டாடியதால், வரும் காலங்களில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இருமாநில அரசு அதிகாரிகளும் கலந்து பேசி கண்ணகி கோட்டத்தில் சித்ரை முழுநிலவு விழா நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 1985 முதல் ஒவ்வொரு ஆண்டும், இருமாநில அரசு அதிகாரிகளும் கலந்து பேசி கோயில் விழா நடத்துவது குறித்து முடிவு செய்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு வரும் மே 5ல் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வாகன வசதி, குடிநீர், உணவு வசதிகள், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை குமுளியில் இருமாநில கலெக்டர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசு செய்யவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், அதில், தமிழக பகுதியான பளியன்குடியில் இருந்து மலைபாதையில் பக்தர்கள் வாகனங்களில் செல்ல தார்சாலை அமைத்து தரவேண்டும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக கண்ணகி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிட வேண்டும்,

இந்து சமய அறநிலையத்துறை அர்ச்சகர்கள் மூலமாக மங்கலதேவி கண்ணகி கோவிலில் பூஜை, யாகம் உள்ளிட்டவைகளை நடத்த வேண்டும். காணிக்கைகளை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும், கோயிலுக்குச் செல்ல பளியன்குடி மற்றும் குமுளி பகுதிகளுக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும், குமுளி, கொக்கரக்கண்டம் வழியாக கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து நேரடியாக சென்று வர தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு அனுமதி சான்று வழங்க வேண்டும். பளியன்கு வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை மூலம் பாதைகள் சீரமைத்தல், ரோப் கயிறுகளை கட்டி ஏற்பாடு செய்து தரவேண்டும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம், கழிப்பறை, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா இருமாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்: அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kannagi Temple Chitra Pournami Festival Bi-State ,Kannagi ,Temple ,Chitra Pournami Festival ,Gudalur ,-State ,Dinakaran ,
× RELATED செல்போன் திருட்டு தொடர்பாக...