×

கரூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10.55 கோடியில் 55 வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைப்பு

கரூர், ஏப். 16: கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 10.55 கோடி மதிப்பில் 55 பல்வேறு திட்டப்பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் ரூ. 7.92 லட்சம் மதிப்பில் பைப் லைன் விஸ்தரிப்பு பணிகள், இதே பகுதியில் ரூ. 13.90 லட்சம் மதிப்பில் ஆண்டாங்கோயில் ரோடு முதல் மேட்டுத் தெரு வரை தார்ச்சாலை பணி, முத்து நகர் பகுதியில் தார்ச்சாலை பணி, ரோட்டுக்கடை பகுதியில் ரூ. 3.62 லட்சம் மதிப்பில் சிமெண்ட் காங்கீரிட் சாலை, சரஸ்வதி நகர்ப்பகுதியில் ரூ. 3.78 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, இதே பகுதியில் ரூ. 2.10 ட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ஆண்டாங்கோயில் புதூர் பகுதியில் ரூ. 5.15லட்சம் மத ப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இதே போல், ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சியில் ரூ. 10லட்சம் மதிப்பில் மயான கொட்டகை, காத்திருப்போர் கூடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, அக்ரஹாரம் பகுதியில் ரூ. 6.35 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில் ரூ. 14.75 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, வேப்பம்பாளையம் பகுதியில் ரூ. 6.15லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, இதே பகுதியில் ரூ. 7.92 லட்சம் மதிப்பில் புதிய சாக்கடை மற்றும் உறிஞ்சு குழாய் அமைக்கும் பணி. மேலும், இதே பகுதியில் 3.94லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை, ரூ. 1.84 லலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை போன்ற பணிகள் துவங்கி வைக்கப்பட்டன. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 1ல் ரூ. 35.21லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, திருக்காம்புலியூர் பகுதியில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டும் பணி, ரூ. 17.85லட்சம் மதிப்பபில் பெரியார் நகர், கணேசா நகர் போன்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணி, பண்டுதகாரன்புதூர் பகுதியில் ஆழ்குழாய் அமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, கோடங்கிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரூ. 22லட்சம் மதிப்பில் புதிய நகர பொது சுகாதார நகர்ப்புற நல ஆய்வக கட்டிடம், 44வது வார்டில் ரூ. 3லட்சம் மதிப்பில் பொன் நகர் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி, 48வது வார்டில் ரூ. 3லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, கணதிபாளையம் வாரி நகர் பகுதியில் ரூ. 21.80லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 19வது வார்டு பகுதியில் ரூ. 8லட்சம் மதிப்பில் பேரூந்து நிழற்குடை அமைக்கும் பணி, இதே பகுதியில் ரூ. 18.34 லட்சம் மதிப்பில் தார்சசாலை அமைக்கும் பணி, 15வது வார்டில் சின்டெக்ஸ் தொட்டி, தொழிற்பேட்டை சணப்பிரட்டி பகுதியில் ரு. 25லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டிடம் அமைக்கும் பணி, செல்வா நகர் பகுதியில் புதிய சமூதாயக்கூடம், பசுபதிபாளையம் அருணாச்சலம் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 17வது வார்டில் ரூ. 37.80 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 24வது வார்டு பகுதியில் ரூ. 295லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, வாங்கப்பாளையம் பகுதியில் முழு நேர நியாய விலைக் கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் 55 பணிகள் ரூ. 10.55 கோடி மதிப்பில் அமைச்சர் கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், துணை மேயர் சரவணன், கோட்டாட்சியர் ரூபினா, மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத், கிறிஸ்டி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் கரூர் மாநகர பகுதி செயலாளர்கள் கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கரூர் ஆர் கந்தசாமி, வளர்மதி சிதம்பரம், கோயம்பள்ளி, பாஸ்கர் எம். ரகுநாதன் கே. கருணாநிதி , நெடுங்கூர் கார்த்தி, மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் வக்கீல் விஜயகுமார், நகராட்சி தலைவர்கள் ஏ. குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் எம் எஸ் கருணாநிதி மகேஸ்வரி பூவை ரமேஷ்பாபு பொருளாளர் பாரத், மாநகர துணைச் செயலாளர் பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் பசுவை சக்திவேல், சாலை ரமேஷ், மாவட்ட திமுக நிர்வாகி காஜாநஜீர்அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கரூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.10.55 கோடியில் 55 வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Karur assembly ,Minister ,Senthil Balaji ,Karur ,Karur Assembly Constituency ,Senthilbalaji ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம்...