×

ராகுல்காந்தி பதவி நீக்கம் கண்டித்து கரூர், குளித்தலையில் காங்கிரஸ் ரயில் மறியல் முயற்சி

கரூர், ஏப். 16: ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கரூர், குளித்தலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 29 காங்கிரசார்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காலை 11மணியளவில் கரூர் ரயில்வே நிலையம் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி, நகரத் தலைவர்கள் ஸ்டீபன்பாபு, வெங்கடேசன், சண்முகம் உட்பட 50க்கும் மேற்பட்டோர், ஊர்வலமாக கரூர் ரயில்வே நிலையம் நோக்கி மறியல் போராட்டத்தை நடத்தும் வகையில் முன்னோக்கிச் சென்றனர்.

அவர்களை, டவுன் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 29பேர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக கரூர் ரயில்வே நிலையம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்ஜினீயர் பிரபாகரன் தலைமையில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் சத்தியசீலன் வரவேற்றார். இதில் வட்டாரத் தலைவர் சித. ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட துணை தலைவர் நாகேஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் மணிமேகலை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் ஆகியோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு குளித்தலை பஜனை மடத்திலிருந்து ரயில் நிலையம் வரை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு வந்தனர்.

அப்போது ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த காங்கிரஸ் கட்சியினரை குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் ரயில் நிலையம் முன்பே அவர்களை மறித்தனர். மேலும் ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடாதவாறு தடுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் ரயில் நிலையம் வாசல் முன்பு நின்று ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 35 காங்கிரஸ் கட்சியினரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

The post ராகுல்காந்தி பதவி நீக்கம் கண்டித்து கரூர், குளித்தலையில் காங்கிரஸ் ரயில் மறியல் முயற்சி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Karur, Kulithlai ,Karur ,Karur, Kulithalai ,Kulithalai ,Dinakaran ,
× RELATED மாற்றத்தின் புயல் நாடு முழுவதும்...