×

ஒன்றிய அரசின் எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஏப். 16: மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள் சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/ Portal Management/UploadedFiles/noticeCGLE0304 2023.pdf என்ற இணையதள முகவரியிலும்
உள்ளது. இந்த பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கணினி அடிப்படையிலான தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக வருகிற மே மாதம் 3ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆன்லைனில் கட்டணத்தை மே மாதம் 4ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.
இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ஒன்றிய அரசின் எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Govt SSC ,Thiruvallur ,Central Staff Selection Commission ,Union Government SSC ,Dinakaran ,
× RELATED போதை பொருள், கடத்தல் விற்பனை குறித்து...