×

கடன் பிரச்னையால் பெண் தீக்குளிப்பு

பெரம்பூர்: ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையை சேர்ந்தவர் கோதண்டபாணி (40). இவரது மனைவி விஜயலட்சுமி (36). இவர்களுக்கு 9 வயதில் பிரதிஷா என்ற மகளும், 5 வயதில் தர்வின் என்ற மகனும் உள்ளனர். கோதண்டபாணி பிரின்டிங் பிரஸ்சில் வேலை செய்து வருகிறார். விஜயலட்சுமி மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். குடும்பத் தேவைக்காக இவர்கள் ₹15 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். கடனை சரிவர அடைக்க முடியாத காரணத்தினால், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடிவந்து அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் தனியார் வங்கியில் இருந்து வந்த ஒரு நபர், வாங்கிய கடனை செலுத்தாத காரணத்தினால் தம்பதியின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, இரவு 10 மணியளவில் வீட்டில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் பழைய ஆயிலை உடல் மீது ஊற்றி தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். மேலும் விஜயலட்சுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 40 சதவீத தீக்காயங்களுடன் பாக்கியலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடன் பிரச்னையால் பெண் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Gotandapani ,Otteri Stables Road ,Vijayalakshmi ,Pratisha ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது