×

வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா?ஆராய விண்கலம் ஏவியது ஐரோப்பிய விண்வௌி மையம்

பிரெஞ்சு கயானா: வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா? என ஆராய்வதற்காக ஜூஸ் என பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை ஐரோப்பிய விண்வௌி ஆய்வு மையம் அனுப்பியுள்ளது. தூசி துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பூமியை போல் 1,300 மடங்கு பெரிய சூரிய குடும்பத்தின் வியாழன் கோளில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என ஆராய ஐரோப்பிய விண்வௌி ஆய்வு மையம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள ஜூஸ் விண்கலம் ‘ஏரியன்-5’ ராக்கெட்டின் உதவியுடன் பிரெஞ்சு கயானா விண்வௌி ஆய்வு நிலையத்திலிருந்து நேற்று ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஜூஸ் விண்கலம் 8 ஆண்டுகள் பயணித்து 2031ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடைய உள்ளது. இந்த விண்கலம் வியாழன் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை ஆராய்ச்சி செய்யும். வியாழன் கிரகத்தில் புதையுடண்ட கடல்கள், வளிமண்டல அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், மேற்பரப்புகள் மற்றும் வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளும். இந்த விண்கலம் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படுகிறது.

The post வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா?ஆராய விண்கலம் ஏவியது ஐரோப்பிய விண்வௌி மையம் appeared first on Dinakaran.

Tags : Jupiter ,European Space Center ,French Guiana ,
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்