×

பரமேஸ்வருடன் எடியூரப்பா மகன் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் ஜி பரமேஸ்வர் நேற்று கோயிலுக்கு சென்றிருந்தார். எதிர்பார்க்காத வகையில் அதே கோயிலுக்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவும் சுவாமி தரினம் செய்துள்ளார். இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவர் மற்றொருவரிடம் நலம் விசாரித்துக்கொண்டனர். டாக்டர் ஜி பரமேஸ்வர், விஜயேந்திராவுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அப்போது திடீரென்று பரமேஸ்வரின் காலில் விழுந்து விஜயேந்திரா வாழ்த்து பெற்றார். எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, முன்னாள் துணை முதல்வரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற காட்சி தான் தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post பரமேஸ்வருடன் எடியூரப்பா மகன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Yeddyurappa ,Parameswar ,Former ,Congress ,President ,Deputy Chief Minister ,Dr G Parameshwar ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு...