கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘வணக்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசுகிறேன். கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான வதந்திகள் பரவியிருந்ததை பார்த்தேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் வரும் மே 2ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நானும், மாவட்ட எஸ்பியும் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஏப்ரல் 11ம் தேதி சென்றிருந்தோம்.
கோயில் வளாகத்துக்கு அருகில் போகும்போது, வாளாகத்துக்குள்ளே எல்லோருடைய காலணிகளையும் பார்த்த நான், இதனை அப்புறப்படுத்த சொல்லிவிட்டு கோயில் உள்ளே சென்றுவிட்டேன். பின்னால் வந்த என்னுடைய உதவியாளர், என்னுடைய காலணியை எடுத்துக்கொண்டு போனதை தெரிந்து கொண்டு, அவரை அழைத்து இது போல செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினேன். இந்த சம்பவத்துக்கு நான் மிகவும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
The post காலணியை உதவியாளர் எடுத்து சென்ற விவகாரம் கள்ளக்குறிச்சி கலெக்டர் வருத்தம் appeared first on Dinakaran.