×

பாண்டியாவுக்கு அபராதம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. 154 ரன் இலக்கை துரத்திய குஜராத் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றியை வசப்படுத்தியது. தொடக்க வீரர் கில் 67 ரன் விளாசினார். பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்சின்போது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள்ளாக 20 ஓவர்களை பூர்த்தி செய்யாமல் குஜராத் அணி தாமதமாக செயல்பட்டதால், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் ஒவ்வொரு போட்டியும் 3 மணி, 20 நிமிடத்தில் முடிய வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் எதிர்பார்க்கும் நிலையில், பெரும்பாலான லீக் ஆட்டங்கள் 4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post பாண்டியாவுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Pandya ,IPL league ,Mohali ,Punjab Kings ,Gujarat ,Dinakaran ,
× RELATED ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன்...