×

மாஜி பஞ்சாப் முதல்வரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை

சண்டிகர்: வருமானத்துக்கு மீறி சொத்து குவித்த வழக்கில் முன்னாள் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஊழல் தடுப்பு போலீசில் ஆஜரானார். கடந்த 2021ம் ஆண்டு பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சரண்ஜித் சிங் சன்னி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் முதல்வராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பின்னர், சரண்ஜித் வெளிநாடுகளுக்கு சென்றார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சரண்ஜித் மீது புகார்கள் வந்தன. இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.

இது தொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி சரண்ஜித்துக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். சரண்ஜித் சிங் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் முன்னிலையில் நேற்று அவர் ஆஜரானார். அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறும்போது,‘‘பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறது. மாநில அரசு என்னை கைது செய்யலாம்,அடித்து துன்புறுத்தலாம்,சிறையிலும் கூட போடலாம். ஆனால் ஏழைகளுக்காக குரல் கொடுப்பதில் இருந்து என்னை யாரும் தடுக்க முடியாது’’ என்றார்.

The post மாஜி பஞ்சாப் முதல்வரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Punjab ,chief minister ,Chandigarh ,Former ,Saranjit Singh Sunny ,
× RELATED வேட்பாளரின் பிரசாரத்திற்கு...