×

மம்தா அரசு விரைவில் கவிழ்ந்து விடும் பாஜவை சேர்ந்தவரே மே.வங்கத்தின் அடுத்த முதல்வர்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தாவின் அரசு விரைவில் கவிழ்ந்து விடும். பாஜ கட்சியை சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்தார். மேற்கு வங்க மாநி லம் பிர்பூம் மாவட்டம் சூரியில் பாஜ அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து பிர்பூம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது.

மேற்கு வங்க முதல்வராக தனது மருமகனை கொண்டு வரும் கனவில் மம்தா இருக்கிறார். 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே மம்தாவின் ஆட்சி கவிழ்ந்து விடும். 2024 நடைபெறும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 35 இடங்களில் வெற்றியை தாருங்கள். ஊழல், பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க பாஜவை சேர்ந்தவர்தான் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக வருவார்” என்று தெரிவித்தார்.

The post மம்தா அரசு விரைவில் கவிழ்ந்து விடும் பாஜவை சேர்ந்தவரே மே.வங்கத்தின் அடுத்த முதல்வர்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உறுதி appeared first on Dinakaran.

Tags : Mamata ,BJP ,Chief Minister ,Union Minister ,Amit Shah ,Kolkata ,Mamata's government ,West Bengal ,Mamata government ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் கெத்து காட்டிய மம்தா