×

வரும் 18ம் தேதி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை, ஏப்.14: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்திற்குள் (அலுவலக நாட்கள்) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை வடக்கு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 18ம் தேதி அன்று காலை 11 மணிக்கு கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை வடக்க வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கோவை வடக்கு வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரும் 18ம் தேதி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore District ,Collector ,Kranthikumar Badi ,Revenue Kotakshis ,
× RELATED பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில்...