×

கம்பத்தில் சிறை கைதிகளுக்கு புத்தக தானம்

கம்பம், ஏப். 14: தேனி மாவட்ட சிறை, மதுரை மத்திய சிறைகளில் உள்ள சிறைவாசிகள் (கைதிகள்) சிறையில் உள்ள நூலகத்தில் அறிவுப்பூர்வமான புத்தகங்களை படித்து பொது அறிவை வளர்த்திடவும், தங்கள் வாழ்க்கை பயணத்தை நன்மையான வழியில் செயல்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை தலைவர் அமரேஷ்பூசாரி ஆலோசனை பேரில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற தலைப்பின் கீழ் சிறைத்துறையினர் புத்தக தானம் பெற்று சேகரித்து வருகின்றனர். அதன்படி, உத்தமபாளையம் கிளை சிறைத்துறை சார்பில் கம்பம் போக்குவரத்து சிக்னலில் புத்தகதான விழா நிகழ்ச்சி கடப்த 2 நாட்கள் நடைபெற்றது.இதில் பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற புத்தகங்களை சிறைக்கு தானமாக வழங்கினர்.

இதேபோல் கம்பம் நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் உத்தமபாளையம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் வேலுமணியிடம் வழங்கினர். இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் கூறுகையில், ‘‘சிறைவாசிகள் தாங்கள் செய்யும் குற்ற செயல்களில் இருந்து மனம் திருந்தி மறுவாழ்வு வாழ அவர்கள் புத்தகம் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். அதனால் தான் புத்தக தான விழாவினை ஊக்குவிக்கும் வகையில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.’’ என்றார்.

The post கம்பத்தில் சிறை கைதிகளுக்கு புத்தக தானம் appeared first on Dinakaran.

Tags : Gampal ,Kampham ,Theni District Jail ,Madurai Central Jails ,Gampa ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு செயல்விளக்கம்