×

வருசநாடு அருகே சாக்கடை வாறுகால் பணிகள் தீவிரம்

வருசநாடு, ஏப். 14: வருசநாடு அருகே உள்ள பாலூத்து கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ளதேவராஜ் நகர் கிராமச்சாலையில் சாக்கடை கழிவுநீர் வாறுகால் இல்லாமல் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால், இப்பகுதியில் கழிவுநீர் கண்டபடி ஓடி துர்நாற்றம் வீசியது. இந்த சாலை வழியே சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வாறுகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பாலூத்து ஊராட்சி தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார் கூறுகையில், ‘‘அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வாறுகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தற்பொழுது சாக்கடை வாறுகால் பணிகள் முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழக்கும், நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

The post வருசநாடு அருகே சாக்கடை வாறுகால் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Baluthu ,Dinakaran ,
× RELATED வருசநாடு சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் கடும் பாதிப்பு