×

தனியார் வீட்டு சுவரை சீரமைக்க பணம் கேட்ட ஒப்பந்ததாரர்

கரூர், ஏப். 14: கரூர் மாநகராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில் சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த தெருவில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட பள்ளம் தோண்டிய போது அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் விரிசல் விட்டுள்ளது.
இதுகுறித்த மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த வீட்டில் இரும்பு ஜாக்கியை கொண்டு முட்டு கொடுத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சாக்கடைக்கும், அவர்களின் பக்கவாட்டு சுவருக்கும் உள்ள இடைவெளியில் காங்கிரிட் போட வேண்டுமென்றால் 40 ஆயிரம் கொடுத்தால் தான் போடுவோம் என ஒப்பந்ததாரர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

பணம் தர மறுக்க பணி நடைபெறவில்லை என கூறப்படுகிறது.அங்கு வந்த கவுன்சிலர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்ததாரை அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டதை அடுத்து பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தனியார் வீட்டு சுவரை சீரமைக்க பணம் கேட்ட ஒப்பந்ததாரர் appeared first on Dinakaran.

Tags : Karur ,Jeje Nagar ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்