×

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

திண்டுக்கல், ஏப். 14: தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் குடிநீர் குழாய் சேதமடைந்து நீர் வீணாவது உடனடியாக சரிசெய்யப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை எப்போதும் ஒரு பிரச்னையாக இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர் நீர்தேக்கம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிழக்கு மரியநாதபுரத்தில் குடிநீர் குழாய் சேதமடைந்து பல நாட்களாக ஆகியும் சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாக செல்கிறது என நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று சேதமடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாக செல்வதை பார்வையிட்டனர். பின்னர் உடனடியாக அதனை சரிசெய்ய உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி நேற்று மாலை சேதம் அடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது. பல நாட்களாக வீணாக சென்ற குடிநீர் குழாயை சரிசெய்வதற்கு செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul East Marianathapuram ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...