×

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ2 லட்சம் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபர் கைது: செக்ஸ் செயலி மூலம் விற்றது அம்பலம்

பெரம்பூர்: செக்ஸ் செயலி மூலம் போதை பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வருவதாக வியாசர்பாடியில் இயங்கி வரும் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப்பிரிவு டிஎஸ்பி சக்கரவர்த்திக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி உள்ளிட்ட போலீசார், நேற்று சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ சாலையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான ஒரு நபரைப் பிடித்து, அவரது பையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட பெத்தமிட்டமின் எனும் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு (28) என்பதும், பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருவதும், அங்கு ஒரு நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரிடமிருந்து குறிப்பிட்ட இந்த போதைப் பொருளை வாங்கி, அதனை சென்னைக்குக் கொண்டு வந்து அவர் விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது. இவர்கள் கிரைண்டர் என்ற ஒரு செயலியை செல்போனில் டவுன்லோட் செய்து அதில் உள்ள நபர்களிடம் இந்த போதை பொருளை விற்பனை செய்து வந்ததும்,

குறிப்பிட்ட அந்த செயலி ஆண்களுக்கான செக்ஸ் செயலி என்பதும், ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ள இந்த செயலியை பயன்படுத்தி வந்ததும், இந்த போதைப் பொருளை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பாலியல் உறவு கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிபாபுவிடம் இருந்து சுமார் ரூ2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 27 கிராம் பெத்தமிட்டமின் போதைப் பொருளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

The post பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரூ2 லட்சம் போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபர் கைது: செக்ஸ் செயலி மூலம் விற்றது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Walliber ,Bangalore ,Chennai ,Perampur ,Vyasarbadi ,Karnataka ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!