×

அம்பேத்கர் பிறந்த நாள் ஜனநாயகம் காப்போம் என்னும் பெயரில் விசி கட்சியினர் அணிவகுப்பு: திருவள்ளூரில் இன்று நடைபெறுகிறது

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், திருவள்ளூர் மாவட்டத்தின் மேலிடப் பொறுப்பாளருமான அ.பாலசிங்கம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் நடைபெற உள்ள சிறுத்தைகள் அணிவகுப்பை பற்றி கூறியதாவது, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல் சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு சமத்துவ நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சனாதன – கார்ப்பரேட் மோடி அரசின் பாசிச போக்கைக் கண்டிக்கிற வகையில் ஜனநாயகம் காப்போம் என்னும் பெயரில் சிறுத்தைகள் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில் திருவள்ளூர் நகரில் இன்று ஏப்ரல் 14 ம் நாள் காலை 9 மணி அளவில் காக்களுர் பைபாஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆயில் மில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை வரை அணிவகுப்பாக சென்று அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்க உள்ளோம்.

ஆகவே சனாதன கொள்கையை கொண்டிருக்க கூடிய ஒன்றிய அரசின் மக்கள் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து அணிவகுப்பு நடைபெற உள்ளது . சனாதன பாசிச அரசின் பெரும்பான்மை வாத மதவெறி, சிறுபான்மை வெறுப்பு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ரூ.பாயின் மதிப்பு வீழ்ச்சி , பங்கு சந்தையில் அதானியின் கூட்டுக் கொள்ளை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பாசிச போக்கு ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே தலைவருடைய அறிவிப்பை ஏற்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் சிறுத்தைகள் நீல சீருடையில் அணிவகுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.அத்துடன் ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் பங்கு பெற வேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறோம். பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அரசியல் குழு செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நீலவானத்து நிலவன், மாவட்ட செயலாளர்கள் மு.வ.சித்தார்த்தன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post அம்பேத்கர் பிறந்த நாள் ஜனநாயகம் காப்போம் என்னும் பெயரில் விசி கட்சியினர் அணிவகுப்பு: திருவள்ளூரில் இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Save democracy ,VC ,Tiruvallur ,LTTE Party ,
× RELATED அம்பேத்கர் உருவாக்கிய அரசியல்...