×

பொன்னேரியில் சலங்கை பூஜை

பொன்னேரி: பண்டைய தமிழ் கலையின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் பயிலும் மாணவிகள், நாட்டிய கலையை கற்க ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சலங்கை அணிந்து ஆடும் நிகழ்வான சலங்கை பூஜை விழா பொன்னேரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாட்டிய பள்ளியை சேர்ந்த 8 மாணவிகள் ராகம், தாளம், சுதியோடு ஆடி காண்போரை வியக்க வைத்தனர்.

புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், அலாரிப்பு, கூத்துவம் உள்ளிட்ட நாட்டிய உருப்படிகளுடன், ராகமாலிகை, ஹம்சத்வானி, அம்ருதவர்ஷினி போன்ற ராகங்களோடு ஆதி, திஷ்ரம், சதுஷ்ரா, மிஸ்ரம் உள்ளிட்ட தாளங்களுக்கு ஏற்ப பார்வையாளர்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் சிறப்பாக நடனமாடினர். அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post பொன்னேரியில் சலங்கை பூஜை appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை