×

ராணி ரமாதேவி மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: ராணி ரமாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவியார் ராணி ரமாதேவி, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்திய தகவலறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ராணி ரமாதேவி மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rani Ramadevi ,Chennai ,M. K. Stalin ,Tamil Nadu ,M.K.Stalin ,Puthukkottai ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...