×

நிதிஷ் குமாருடன் சந்திப்பு; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வேகம் எடுக்கிறது: சீதாராம் யெச்சூரி பேட்டி

புதுடெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்த பின், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வேகம் எடுத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பாஜ.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை தவிர்த்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் முயற்சியில் மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, கே. சந்திரசேகர ராவ், அகிலேஷ் யாதவ், எச்.டி. குமாராசாமி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி ஆகியோர் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்தனர்.
இந்நிலையில், நிதிஷ் குமார் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியை, இகம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா ஆகியோரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யெச்சூரி, “ எதிர்கட்சி கூட்டணி உருவாக்கும் நிதிஷ் குமாரின் முயற்சிகள் வேகம் எடுத்துள்ளது,’’ என்று தெரிவித்தார்.

ராகுல், கார்கேவுடன் பவார் சந்திப்பு
எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதன் போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

The post நிதிஷ் குமாருடன் சந்திப்பு; எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வேகம் எடுக்கிறது: சீதாராம் யெச்சூரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Sitaram Yechury ,New Delhi ,Bihar ,Chief Minister ,Marxist ,Communist General ,
× RELATED வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதில்...