×

மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி பேராசிரியர் கைது

மதுரை: மதுரை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மதுரை அருகே செக்கானூரணி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவி, மதுரை மகளிர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மதுரை சரக போலீஸ் டிஐஜி பொன்னிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அதே கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (42), மற்றொரு பேராசிரியர், கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஜெகன் கருப்பையாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான பேராசிரியர், மாணவரை தேடி வருகின்றனர்.

  • மாணவிகளை ஆபாசபடம் எடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை செல்போனில் ஆபாச படம் எடுத்ததாக புகார் கூறப்பட்ட சமூக அறிவியல் பாட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து,சிறையில் அடைத்தனர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை கல்லூரி பேராசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Checkanurani ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!