×

வேப்பம்பூ பச்சடி

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1,
வேப்பம்பூ – 1 கொத்து,
வெல்லம் – 100 கிராம்,
மிளகாய் – 1 தேக்கரண்டி,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
நெய் – 1 தேக்கரண்டி,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:

முதலில் மாங்காய் துண்டுகளை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு, வாணலியில் நெய் விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதன் பின்பு, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இறுதியாக அதில், மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து பச்சடி பதத்திற்கு கொதிக்க விடவும். இப்போது நெய்யில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து பரிமாறினால் சித்திரை ஸ்பெஷல் வேப்பம்பூ பச்சடி தயார்.

The post வேப்பம்பூ பச்சடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருப்பு ரசம்