×

மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் முத்து சஸ்பெண்ட்

மதுரை: மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் போராட்டம் வலுத்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி தள பொறுப்பாளராக ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று தனது குழந்தைகளுடன் திருமங்கலத்திற்கு நகர பேருந்தில் வந்துள்ளார். அப்போது திடீரென பேருந்தில் இருந்து கீழே குதித்தார். பேருந்தில் இருந்து குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நாகலட்சுமி, இறப்பதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “எனது தற்கொலைக்கு காரணம் மற்றும் தற்கொலைக்கு தாண்டியவர்கள் ஊராட்சி செயலாளர் முத்து மற்றும் 2 ஊராட்சி கவுன்சிலர்கள் தான்” என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து உயிரிழந்த நாகலட்சுமியின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகலட்சுமியின் உடலை வாங்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் முத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி செயலாளர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மதுரை அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் முத்து சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Padu Secretary ,Pearl ,Madurai ,Pact ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை