×

வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய குற்றச்சாட்டு: கேரளாவில் சபாநாயகர் மீதான பதவி நீக்க தீர்மானம் தோல்வி

திருவனந்தபுரம்: டாலர்  கடத்தல் புகாரில் கேரள சபாநாயகர்   ஸ்ரீராம கிருஷ்ணனை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் தோல்வி அடைந்தது. கேரளாவில் தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சொப்னா, அவரது கூட்டாளி  சரித்குமார்  ஆகியோர் வெளிநாட்டுக்கு டாலர்களை கடத்தியது விசாரணையில்  தெரிய வந்தது.   இதில் கேரள சபாநாயகர் ராம கிருஷ்ணனுக்கும்  தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், டாலர்  கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய சபாநாயகர் ராம கிருஷ்ணனை பதவி நீக்கம் செய்யக்கோரி, காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த  உம்மர் சட்டப்பேரவையில் நோட்டீஸ் கொடுத்தார். இது தொடர்பாக நேற்று  கேள்வி நேரம் முடிந்ததும்  விவாதம் தொடங்கியது. சபாநாயகருக்கு எதிராக  தீர்மானம் வரும்போது அவர்  சபாநாயகர் இருக்கையில் அமரக் கூடாது. இதனால், அவர் எம்எல்ஏ.க்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தார். துணை சபாநாயகர் சசி,  விவாதத்தை நடத்தினார். காங்கிரசை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் ெசன்னித்தலா, ஆளும் கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக பேசினர்.ஸ்ரீராம கிருஷ்ணன் பேசுகையில், ‘‘தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் கடை திறப்பு விழாவுக்கு நான் சென்றது உண்மைதான். அவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது ெதரியாது. என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை,’’ என்றார். ெதாடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ெபரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தீர்மானம் தோற்றது. …

The post வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய குற்றச்சாட்டு: கேரளாவில் சபாநாயகர் மீதான பதவி நீக்க தீர்மானம் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Speaker ,Kerala ,Thiruvananthapuram ,Srirama Krishnan ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...