×

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 உதவி தொகை அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட ஊராட்சி செயலர் பிரசன்ன வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் சரஸ்வதி சந்திரசேகர், ஏ.ஆர்.டி.உதயசூரியன், இந்திரா குணசேகர், ஏ.ஜி.ரவி, விஜயகுமாரி சரவணன், சாரதம்மா முத்துசாமி, எஸ்.ராமஜெயம், தேசராணி தேசப்பன், டி.தென்னவன், சிவசங்கரி உதயகுமார், மு.சதிஷ்குமார், சுதாகர், தேவி தயாளன், இ.தினேஷ்குமார், பாண்டுரங்கன், அம்மினி மகேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாவட்ட வளர்சிக்கான திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தகுதியான குடும்பத் தலைவிக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதி அளித்தது, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தும், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருவதற்கும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியதிற்கும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 உதவி தொகை அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Tiruvallur ,president ,KVG Umamakeshwari.… ,M.K.Stalin ,
× RELATED சொல்லிட்டாங்க…