×

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9212 கான்ஸ்டபிள்கள் :10ம் வகுப்பு/ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9212 கான்ஸ்டபிள்/டிரேட்ஸ்மென் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி: Constable (Tradesman , Technical): மொத்த காலியிடங்கள்: 9212.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:

(ஆண்கள்)- அகில இந்திய அளவிலான இடங்கள் 9105. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள்: 579
Driver-176, Motor Mechanic Vehicle-27, Cobbler-12, Carpenter- 9, Tailor- 17, Brass Band-10, Pipe Band-4, Bugler-79, Gardener-6, Painter-3, Cook/Water Carreer-144, Washermen-24, Barber-19, Safai Karmachari-49.)
(பெண்கள்)- அகில இந்திய அளவிலான 107 இடங்கள். தமிழ்நாட்டில் உள்ள இடங்கள்: 14.
Brass Band-1, Bugler-3, Cook/Water Carrier-6, Washerman-1, Safai Karmachari-3, சம்பளம்: ரூ.21,700-69,100.

வயது வரம்பு: 1.8.2023 தேதியின்படி 18 முதல் 23க்குள். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். டிரைவர் பணிக்கு மட்டும் 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக் பணிக்கு 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். டிரைவர் மற்றும் மோட்டார் மெக்கானிக் பணிகள் தவிர இதர பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருடத்திற்கும் அதிகமான பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ அகலத்துடனும், 5 செ.மீ., விரிவடையும் நிலையிலும் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

கட்டணம்: ெபாது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100/-. பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 10ம் வகுப்பு தகுதி அடிப்படையில் எழுத்துத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும்.உடல் திறன் தேர்வில் ஆண்கள் 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 1.6 கி.மீ தூரத்தை 8½ நிமிடங்களிலும் ஓடிக் கடக்க வேண்டும். உடற்தகுதி தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை கணக்கிடப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, கடலூர், சேலம், தேனி, திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.www.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.4.2023.

The post மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9212 கான்ஸ்டபிள்கள் :10ம் வகுப்பு/ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Central Reserve Police Force ,Union Ministry of Interior ,
× RELATED தேசிய பாய் மர படகு போட்டி: ஆவடி மத்திய...