×

மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளி சென்ற மக்கள்

சிங்கம்புணரி, ஏப்.13: சிங்கம்புணரி அருகே கோவில்பட்டி புது கண்மாய் பகுதியில் புதுவயல் உள்ளது. கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மீன்பிடித் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மீன்பிடி திருவிழா கிராம மக்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வலியுறுத்தி நடைபெற்ற இந்த மீன்பிடித் திருவிழாவில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்மாய் முன்பு குவிந்தனர். காலை 8 மணிக்கு மீன்பிடி திருவிழா தொடங்கியது.

இதில் கச்சா, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களைக் கொண்டு ஏராளமானோர் மீன்களை பிடித்தனர். கட்லா, விரால் மீசை கெளுத்தி உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கியது. பெரிய அளவில் மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி வில்லியார் கண்மாயிலும் நேற்று மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் மீன் பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர்.

The post மீன்பிடி திருவிழாவில் மீன்களை அள்ளி சென்ற மக்கள் appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Puduvyal ,Kovilpatti Pudu Kanmai ,Kanmai ,Dinakaran ,
× RELATED களைகட்டிய மஞ்சுவிரட்டு