×

மியான்மரில் அடாவடி: பொதுமக்கள் 100 பேரை கொன்று குவித்த ராணுவம்

நேபிடாவ்: மியான்மர் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவம் ஆட்சி செய்து வருகிறது. ஆட்சியை பிடித்த பிறகு எதிர்பார்ப்பாளர்கள் மீது ராணுவம் அடிக்கடி வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சகாயிங் பிராந்தியத்தில் உள்ள பாஜிகி கிராமத்தில் ராணுவத்திற்கு எதிராக போராடி வரும் மக்களின் பாதுகாப்பு படை அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது திறப்புவிழாவுக்கு ஏராளமான கிராம மக்கள், பெண்கள், குழந்தைகள் கூடியிருந்த நிலையில், அந்த கிராமத்தின் மீது மியான்மர் ராணுவம் வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் 100 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நாட்டிற்கும், ராணுவத்திற்கும் எதிரானவர்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் ஜா மின் துன் கூறி உள்ளார். ராணுவ புரட்சிக்குப் பின் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆங் சான் சூகி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மியான்மரில் அடாவடி: பொதுமக்கள் 100 பேரை கொன்று குவித்த ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Nebidao ,Myanmar ,Adawadi ,Dinakaran ,
× RELATED மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்