×

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான பின் பேரவைக்கு வந்தார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏஈவிகேஎஸ் இளங்கோவன். டெல்லியில் மூத்த தலைவர்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பியபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் பிரச்னை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், குணமடைந்து கடந்த வாரம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு திரும்பி, தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரை மருத்துவர்கள் சில நாட்கள் நன்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்தனர். நேற்று காலை 9 மணி அளவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டசபையில் கலந்து கொள்வதற்காக தலைமை செயலகத்துக்கு வந்தார். அவரை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்எம்எல்ஏக்கள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பேரவை வளாகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.

The post ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான பின் பேரவைக்கு வந்தார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : EVKS Elangovan ,MLA ,Erode East Constituency ,Congress MLAs ,CHENNAI ,EVKS Ilangovan ,Delhi ,Erode East ,Assembly ,
× RELATED மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு...