×

கோவை, மதுரை, கரூர் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: கோவை, மதுரை, கரூர் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் I-ன் செயல் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.58.18 கோடியில் சிறப்பு பணிகள், வடசென்னை அனல் மின் நிலையம் II-ன் செயல் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.95.90 கோடியில் சிறப்பு பணிகள், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ரூ.16.68 கோடி திட்ட மதிப்பீட்டில் புனரமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அனல் மின் நிலையம் I-ன் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ரூ.12.55 கோடியில் சிறப்பு பணிகள், மேட்டூர் அனல் மின் நிலையம் II-ன் செயல்திறனை மேம்படுத்துவதற்காக ரூ.9.13 கோடியில் சிறப்பு பணிகள், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்திற்காக நிலக்கரி கையாளும் எந்திரங்கள் 2 நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை, மதுரை, கரூர் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Govine, Madurai and ,Karur Corporation ,Chennai ,Gov ,Madurai ,Karur ,Madurai and Karur Corporation ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...