×

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதை அரசு போக்குவரத்து கழகம் வழக்கமாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு நிறைவு பெற்று விடுமுறையில் உள்ளனர். மேலும், தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை தொடர்ந்து வார விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களும் தனது சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து நாளை கூடுதலாக 300 பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

அதேபோல் ஏப்ரல் 21-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வழக்கமாக சென்னையை பொறுத்தவரை தினம்தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

The post தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil New Year ,Ramjan festival ,Transport Corporation ,Ramzaan ,
× RELATED குரோதி வருட தமிழ் புத்தாண்டில்...