×

பிரேசிலில் நூற்றுக்கணக்கான கரை ஒதுங்கிய மீன்களால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி..!!

பிரேசில்: பிரேசில் நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் உள்ள கடற்கரையில் பெரிய அளவிலான திருக்கை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின.

நூற்றுக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரியோடி ஜெனிரோ மாகாணநிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். கடலில் நிகழ்த்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சுழல் அதிகாரிகள் கடல் தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே கடல் தண்ணீரில் வழக்கத்தை விட ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தும் திருக்கை மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து சுற்றுசூழல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பிரேசிலில் நூற்றுக்கணக்கான கரை ஒதுங்கிய மீன்களால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Brazil ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...