×

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகரட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா கடற்கரையில் இருந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் இணைக்கக்கூடிய லூப் சாலையில் மீனவர்கள் உடைய கடைகள் என்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், சாலையை ஆக்கிரமித்து இருப்பதாகவும் கூறி அதை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது, மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சிக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் காலையில் இருந்து மெரினா கடற்கரை லூப் சாலையில், சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கக்கூடிய மீன்விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற கூடிய பணிகளில் சென்னை மாநகராச்சியம், சென்னை மாநகர காவல்துறையும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அதே நேரத்தில் மீன் விற்பனை செய்பவர்களும் காவல்துறை மற்றும், மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய காரணத்தினால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் என்பது ஏற்பட்டு வருகின்றது.

குறிப்பாக அந்தப் பகுதியில் மீன் விற்பனை செய்வோருக்கு ஏற்கனவே அனுமதி என்பது வழங்கப்பட்டு இருக்கின்றது. அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி வெளியே சாலையில் மீன் விற்பனை செய்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு மறுப்பு தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்து எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே அங்கு கட்டப்பட்டு வரும் மீன் விற்பனை அங்காடியில் கடைகள் ஒதுக்குவதற்கு முன்பாகவே தற்போது தங்கள் விற்பனை செய்யக்கூடிய மீன் விற்பனையை அகற்றுவதால் தங்களுடைய வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அங்கு மீன் விரப்பணி செய்யக்கூடிய போது மக்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் சாலையை அகரமித்து மீன் விற்பனை செய்வது என்பது ஏற்கக்கூடியது அல்ல என்பது குறித்து விளக்கங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விளக்கி வருகின்றனர். இருந்த போதிலும் இந்தத் தொடர் நடவடிக்கை காரணமாக அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய காரணத்தினால் தற்போது லூப் சாலையில் பரபரப்பான சூழல் என்பது ஏற்பட்டு வருகின்றது.

The post சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகரட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் மீனவர்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Chennai's Pattinappakkam loop road ,CHENNAI ,Pattinappakkam loop ,Pattinappakkam loop road ,
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி