×

வலங்கைமான் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

வலங்கைமான், ஏப். 12: வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெகடர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வலங்கைமான் ஒன்றியம் . நார்த்தாங்குடி ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 87 ஆயிரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிடம் , உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ .20 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை, ரூ.13. 5 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி மையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சாரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆலங்குடி ஊராட்சியில் ரூ .8 லட்சத்து 14 ஆயிரத்தில் அமைக்கப் பட்டுள்ள கதிர் அடிக்கும் களம், ர .13 லட்சத்து 5 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி மையம், ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளின் தரம் , புதிதாக கட்டப்பட்டு வரும் ஆலங்குடி ஊராட்சி அலுவலக கட்டிடம், தொடர்ந்து சாரநத்தம் ஊராட்சியில் சாரநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ .33 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை ஆகியவற்றை பார்வையிட்டார். இதேபோல சித்தன்வாழுர் ஊராட்சியில் குச்சிபாளையம் பகுதியிலுள்ள ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடம் ,

புளியகுடி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கான்வாடி மையம், அரித்துவாரமங்கலம் பகுதியில் ரூ.15.25 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலை கடை, ரூ .78.90 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடையை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்தார். மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட விவரம் குறித்தும் கேட்டறிந்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி , கமல்ராஜன் , உதவி செயற் பொறியாளர் ரங்கராஜன், உதவி பொறியாளர் வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வலங்கைமான் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Walangaiman Union ,Valangaiman ,Collector ,Saru ,Valangaiman Union ,
× RELATED திருவாரூர் வலங்கைமான் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி