×

ஓசூரில் வேலை பார்த்த கடையில் செல்போன் திருடிய ஊழியர் கைது

ஓசூர், ஏப்.12: ஓசூர் எம்.ஜி ரோட்டை சேர்ந்தவர் வர்தமான் (45). செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் ஓசூர் தாலுகா அலுவலக சாலை தாசரப்பேட்டையை சேர்ந்த மாருதி (24).என்பவர் கடந்த ஒன்றரை மாதங்களாக வேலை செய்து வந்தார்.இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி வர்தமான் கடையில் இருந்த, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்று திருட்டு போனது. இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் திருட்டு போன செல்போன் எண்ணின் ஐஎம்இ எண் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் செல்போனை திருடியது, கடையில் வேலை செய்து வந்த மாருதி (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாருதியை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட செல்போனை மீட்டனர்.

The post ஓசூரில் வேலை பார்த்த கடையில் செல்போன் திருடிய ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Vardaman ,Hosur MG Road ,Dinakaran ,
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது