×

தேரோடும் வீதிகளில் மின் கம்பிகள்; ரூ6,578 கோடி மதிப்பில் புதை வடங்களாக மாற்றப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சட்டசபையில் திருவாரூர்் தொகுதி எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் (திமுக) பேசுகையில், ‘திருவாரூர்் நகரத்தில் தேரோடும் வீதிகளின் மேலே செல்லும் மின் கம்பிகள் புதைமின் வடங்களாக மாற்றப்படுமா. தேரோடும் 4 வீதிகளில் 2 வீதிகளில் மட்டும் தற்போது பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த வீதிகளை சேர்த்து ஒரே நேரத்தில் பணிகளை தொடங்க வேண்டும். அதோடு இணைந்த தொடர் சாலைகளாக உள்ள கமலாயம் தெப்பகுளத்தின் மூன்று வீதிகளையும் சேர்த்து புதைவடக்கம்பி அமைக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘திருவாரூர் நகரத்தில் தியாகராயர் கோயிலின் தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதை வடங்களாக மாற்றுவதற்கு ரூ6,578 கோடி மதிப்பீட்டில் முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். விரைவில் இப்பணிகள் தொடங்கும்’என்றார்.

The post தேரோடும் வீதிகளில் மின் கம்பிகள்; ரூ6,578 கோடி மதிப்பில் புதை வடங்களாக மாற்றப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilbalaji ,Thiruvarur Constituency ,MLA ,Bundi K. ,Khalivanan ,Dzhagha ,Thiruvarur ,Chenthilbalaji ,
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...