×

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி நோயாளிகள் வரைந்த ஓவிய கண்காட்சி: கூட்டுறவு முதன்மை செயலர் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நோயாளிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உலக பார்க்கின்சன்ஸ் தினத்தை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் “மீண்டெழும் திறனின் ஓவியங்கள்” என்ற பெயரில் நோயாளிகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி, ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா தலைமையில் நேற்று நடைபெற்றது. கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இதில் கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் நிர்வாக இயக்குனரும், திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, இணை நிர்வாக இயக்குனர் கந்தசாமி பரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பேராசிரியர் முகமது ரேலா பேசுகையில், ‘அர்த்தமுள்ள சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு, அனைத்து தகுதியும் உரிமையும் இருக்கிறது. இதனால், சிறப்பான சிகிச்சையை கண்டறிந்து, அதன் வழியாக இறுதியில் நோயிலிருந்து குணம் பெறவும், அவர்களது வாழ்க்கை லட்சியங்களை அடைவதற்கு உதவவும் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.

பார்கின்சன்ஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க உடல், உணர்வு, சமூகம் சார்ந்த அம்சங்களுடன் தகவல் தொடர்பு அறிவுத்திறன் மற்றும் மனநலம் அடிப்படையிலான அம்சங்களையும் கவனத்தில் கொள்கின்ற ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை அணுகுமுறையே சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம். இந்நோயாளிகளுக்கு, இந்த நோய் பாதிப்பை சமாளித்து வாழ்வதற்கான ஒரு வழிமுறையாக படைப்பாக்க செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு, இந்த ஓவியக் கண்காட்சியும், பயிலரங்கமும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,’ என்றார்.

The post உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி நோயாளிகள் வரைந்த ஓவிய கண்காட்சி: கூட்டுறவு முதன்மை செயலர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : World Parkinson's Day ,Tambaram ,Rela Hospital ,Crompettai ,Principal Secretary ,Dinakaran ,
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...