×

அதானி மோசடி விவகாரத்தில் ஜேபிசி விசாரணையை எதிர்க்க மாட்டோம்: தேசியவாத காங். தலைவர் சரத் பவார் உறுதி

மும்பை: அதானி மோசடி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். அதானி பங்குச் சந்தை மோசடி குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையே உண்மையை வௌிக்கொண்டு வரும் என 19 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அதானி மோசடி விவகாரத்தில் ஜேபிசி விசாரணையை விட உச்ச நீதிமன்ற குழுவே சிறந்தது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்திருந்தார். இது எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்த சரத் பவார், “அதானி மோசடி குறித்த விசாரணை விவகாரத்தில் 19 கட்சிகள் வைத்துள்ள ஜேபிசி விசாரணையில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், பாஜவுக்கு எதிரான 19 எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நாங்கள் கெடுக்க மாட்டோம். அவர்களின் கோரிக்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

The post அதானி மோசடி விவகாரத்தில் ஜேபிசி விசாரணையை எதிர்க்க மாட்டோம்: தேசியவாத காங். தலைவர் சரத் பவார் உறுதி appeared first on Dinakaran.

Tags : JPC ,Nationalist Congress ,President ,Sharad Pawar ,Mumbai ,JBC ,Sarath Pawar ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…