×

மேகாலயா குகையில் புதிய தவளை இனம்: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

ஷில்லாங்: மேகாலயாவின் தெற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள குகையின் மிக உட்பகுதியில் புதிய தவளை இனத்தை இந்திய விலங்கியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகவல் ஓர் ஈரானின் லோரஸ்டன் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் பன்முகத்தன்மைக்கான சர்வதேச இதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குகைக்குள் இருந்து தவளை இனம் கண்டுபிடிக்கப்படுவது இது 2வது முறையாகும். இதற்கு முன், கடந்த 2014ம் ஆண்டு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையின் குகை ஒன்றில் இருந்து மிக்ரிக்ஸ்யலுஸ் ஸ்பெலுன்கா என்ற புதிய இன தவளை கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பாஸ்கர் சைகியா கூறுகையில், ‘‘சிஜு குகையின் மிக உட்பகுதியில் இருந்து கேஸ்கேட் ரானிட் இனத்தை சேர்ந்த புதிய வகை தவளைகளை கண்டுபிடித்துள்ளோம். இந்த குகை 4 கிமீ நீளமுள்ள இயற்கையான சுண்ணாம்பு குகையாகும். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக இந்த தவளை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அமோலோப்ஸ் சிஜு என பெயரிடப்பட்டுள்ளது’’ என்றார். சிஜு குகையில் 100க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post மேகாலயா குகையில் புதிய தவளை இனம்: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Meghalaya ,India ,South Garo Hills ,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு