×

பஜாஜ் பல்சார் 220எப்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்சார் 220 எப் பைக்கை அறிமுகம் செய்வதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி, இந்த புதிய பைக் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்பட்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது.

புரொஜெக்டர் ஹாலோஜன் ஹெட்லாம்ப், எல்இடி டெயில் லைட், ஒன்றைச் சானல் ஏபிஎஸ் உள்ளிட்டவை இதில் உள்ளன. இதில் உள்ள 220 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 20.11 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 18.55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post பஜாஜ் பல்சார் 220எப் appeared first on Dinakaran.

Tags : Bajaj ,Bajaj Auto ,Dinakaran ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...