×

ருசியில் அள்ளும் மூக்குத்தி அவரை

காம்புக் கத்தரி அல்லது கிராம்புக் கத்தரி (Ipomoea muricata) என்று அழைக்கப்படுவது முக்குத்தி அவரை. எல்லா காலத்திலும், வேலியோரம் வளருகின்ற கொடி வகை. இதன் தண்டுப்பகுதி சமையலுக்கு உதவும். இதன் மலர்கள் மாலையில் பூக்கும். இக்கொடியின் காய், கிராம்பு வடிவில் இருக்கும். இது சிறிய கொத்துக்களைக் கொண்டதாக பூத்து, காய்க்கும். இதன் பிஞ்சுக் காய்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. காய்கள் நீளமான தண்டுகளுடன் குமிழ் போன்ற நுனிகளுடன் கிராம்பு வடிவத்தில் இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்திலும், ஊதா நிறத்திலும் இருக்கும். இதில் பச்சை மூக்குத்தி அவரை, சிவப்பு மூக்குத்தி அவரை என இரண்டு வகைகள் உண்டு.

மூக்குத்தி அவரை பொரியல்

தேவையான பொருட்கள்:

1/2 கிலோ (பச்சை நிற) மூக்குத்தி அவரை,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 5,
தேங்காய் – அரை மூடி,
மிளகு சீரகம் – மூன்று தேக்கரண்டி,
எண்ணெய் – 3 தேக்கரண்டி,
கடுகு உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி,
உப்பு தேவையான அளவு.

பக்குவம்:

முத்திப்போன முக்குத்தி அவரையைப் பயன்படுத்தக்கூடாது. காய்களை கழுவி எடுத்தபின், காம்பிலிருக்கும் தலைப்பகுதியை கிள்ளி எறிந்துவிடவேண்டும். தண்டுப்பகுதி பட்டுமே சமையலுக்கு பயன்படும். நறுக்கினால் நார் இல்லாமல் வருகின்ற காய்தான் சமையலுக்கு உகந்தது. பிஞ்சாக, நடுத்தரமாக இருக்கிற அரைகிலோ மூக்குத்தி அவரைக் காய்களை துண்டு துண்டாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.அடுப்பைப் பற்றவைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம்பருப்பு போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயத்தைக் கொட்டி வதக்க வேண்டும். பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம்.வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய மூக்குத்தி அவரையை கொட்டி வதக்க வேண்டும். வதக்கும்போதே மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். அரைமூடி தேங்காய், பச்சை மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றை சற்று கரகரப்பாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.காய் எண்ணெயில் வதங்கியதும், தீயை மிதமாக்கி, அரைத்த விழுதைக்கொட்டி 3 நிமிடம் நன்றாக கிளறி எடுத்தால் சுவையான மூக்குத்தி அவரைப் பொரியல் ரெடி.ஒரு ரகசியம் சொல்லட்டுமா… உருவத்தில் பார்ப்பதற்கு மூக்குத்தி போன்று இருந்ததால்தான், இதற்கு மூக்குத்தி அவரை என்று பெயர் வந்தது. ஆனால் இது அவரை குடும்பத்தை சேர்ந்த காய்கறி கிடையாது. கேரளாவில் இதனை நித்திய வழுத்தனன்காய், நித்தியக்காரி என்று அழைக்கிறார்கள். இந்த செடியில் எந்தவித பூச்சி தாக்குதலும் ஏற்படாது என்பது கூடுதல் சிறப்பு.

  • ஜெய

The post ருசியில் அள்ளும் மூக்குத்தி அவரை appeared first on Dinakaran.

Tags :
× RELATED காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை;...