×

நிலக்கரி ஏல ஒப்பந்த நடைமுறைக்கு விலக்கு பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி!!

சென்னை : நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காவிரி டெல்டா பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேண்டிய தேவையை வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலலமைச்சர் அவர்கள் 4.4.2023 அன்று இந்தியப் பிரதமர் திரவையில் 5.4.2023 அன்று காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையினை இரத்து செய்திட கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பினை இரத்து செய்தது.

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (11.4.2023) தலைமைச் செயலகத்தில்,நாகப்பட்டினம் – தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவரும், காவிரி விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான திரு.காவிரி தனபாலன், திருவாரூர் மாவட்டம் – காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் திரு. வி. சத்தியநாராயணா, மயிலாடுதுறை மாவட்டம் – காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் திரு. குரு கோபி கணேசன், நாகப்பட்டினம் மாவட்டம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திரு. வி. சரபோஜி,

தஞ்சாவூர் மாவட்டம் – கரும்பு விவசாயிகள் சங்கத்தின் திரு. வி. கோவிந்தராஜ், தஞ்சை விவசாய சங்கத்தின் திரு. வி. ஜீவகுமார், திருச்சி மாவட்டம் – ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. பூவை விசுவநாதன், கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கே.வி. இளங்கீரன்; கடலூர் மாவட்டம் – விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் திரு. அக்ரி கா. பசுமை வளவன், நாகப்பட்டினம் மாவட்டம் – உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு. மா. வினோத் குமார், நாகப்பட்டினம் மாவட்டம் – பட்டதாரிகள் இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. மா. பிரகாஷ், அரியலூர் மாவட்டம் – காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. தங்க தர்மராஜன்,

கடலூர் மாவட்டம் – வீராணம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. தமிழ்வளவன், கடலூர் மாவட்டம் – உழவர் மன்றத் தலைவர் திரு. குஞ்சிதபாதம், கடலூர் மாவட்டம் – காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் திரு. செல்வகுமார், கடலூர் மாவட்டம் – கீழனை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. விநாயகமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டம் – காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் திரு. கே. பிரபாகரன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். இச்சந்திப்பின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. நாகை மாலி, திரு. சிந்தனைச் செல்வன், திரு. கோ. அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,BCE G.K. ,stalin ,Chennai ,Union government ,
× RELATED நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த...