×

வியாட்நாமில் அதீத வாகன பயன்பாடால் காற்று மாசு அதிகரிப்பு: ஹனோய் நகரில் முககவசத்துடன் வலம் வரும் மக்கள்

வியட்நாம்: கடற்கரை, ஆறுகள் என இயற்கை எழில் கொஞ்சும் வியட்நாமில் காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் முககவசம் அணியும் கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியட்நாமின் ஹனோய் நகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதன் தர குறியீடும் 161ஆக பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையை உணர்த்திவருகிறது. இதற்கு குளிர்ந்த வானிலை மற்றும் பனிமூட்டமும் ஒரு காரணம்.

இதனால் அதிகாலை நடைப்பயணத்தை முடிந்தவரை தவிர்த்துவரும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக முகக்கவசம் அணிந்து வெளியே சென்று வருகின்றன. ஹனோய் நகரில் காற்றில் கலக்கும் பி.எம் 2.5 நுண்துகள்களின் அளவு உலக சுகாதாரத்துறை அமைப்பு நிர்ணயித்ததை விட 17 மடங்கு அதிகமாக உள்ளது. இந்த காற்று மாசு அதிகரிப்புக்கு அதிகப்படியான வாகன பயன்பாடு திறந்த வெளியில் பயிர் கழிவுகளை எரிப்பதே காரணம் என்றே சொல்லப்படுகிறது.

Tags : Vietnam ,Hanoi ,
× RELATED நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி