×

கோடையிலும் முழு கொள்ளளவை எட்டிய ஈளாடா தடுப்பணை

கோத்தகிரி : கோத்தகிரியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஈளாடா தடுப்பணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறையாமல் உள்ளதால் கோடைக்காலம் நெருங்கவுள்ள நிலையில் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் எதிர் வரும் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈளடா, கைக்காட்டி, புதூர்,கேர்பெட்டா, டானிங்டன், கைக்காட்டி,சுள்ளிகூடு, காக்கா சோலை,கெரடாமட்டம், கோடநாடு, நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு ஏற்றவாறு நீர் ஆதாரமாகவும் ஈளாடா தடுப்பணை உள்ளது.

இந்த தடுப்பணை கோத்தகிரி பேரூராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு கடந்த காலங்களில் பருவ மழைக்கு முந்தைய காலக்கட்டத்தில் நன்கு தூர்வாரப்பட்டதன் காரணமாக தற்போது மற்றும் கடந்த மாதத்தில் அவ்வப்போது இரவு நேரங்களில் பெய்து மழை காரணமாக தடுப்பணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறையாமல் தண்ணீரை இருப்பு வைக்கும் அளவிற்கு பராமரிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து தடுப்பணையானது அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கோடைக்காலத்திலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும்,மலைப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏற்ற நீர் ஆதாரமாகவும் உள்ள தடுப்பணை மூலம் குடிநீர் மற்றும் விளைச்சலுக்கு ஏற்ற நீர் கிடைத்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை காலமான தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடாது எனவும் கோத்தகிரி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Tags : Gothagiri ,Ielada ,Kotakiri ,
× RELATED கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு