
சென்னை: கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவுபெற்றது. மாநில மனித உரிமைகள் ஆணைய காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் குமார், சுந்தரேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி, துணை இயக்குனர், பத்மாவதி, முதல்வர் பலக ராம்தாஸிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தேர்வு முடிந்தவுடன் அடுத்த வாரம் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று மனித உரிமைகள் ஆணைய காவல்துறை தெரிவித்திருக்கிறது.
