×

நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்-ஏக்கருக்கு ₹4,500 கூலியாக வழங்கப்படுகிறது

நெமிலி : நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வடமாநில தொழிலாளர்களை தமிழகத்தில் சிலர் தாக்குவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரவியது. இதனால் சில வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். ஆனால், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் கூறியதாவது:

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என 18 பேர் நடவு பணிக்கு வந்துள்ளனர். ஏஜென்ட் ஒருவர் என்னிடம் இவர்களை ஒப்படைத்துள்ளார். இவர்கள் இப்போது என்னுடைய நிலத்தில் நெல் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ₹4,500 கூலியாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசி சமைத்து சாப்பிடுவதற்கு தருகிறோம். மேலும், காய்கறி உள்ளிட்ட பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

அவர்கள் தங்குவதற்கு இடம் தருகிறோம். மேலும், காலை 6 மணிக்கே நடவு பணிக்கு வந்து விடுகின்றனர். என்னுடைய நிலத்தில் நடவு பணி முடிந்ததும் அடுத்து யார் அழைக்கிறார்களோ அங்கு நடவு பணிக்கு செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். பாஸ்ட் புட் கடை, தனியார் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது நெல் நடவு பணியிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தில் நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர்கள்-ஏக்கருக்கு ₹4,500 கூலியாக வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : North State ,Nemili ,North ,State ,Tamil Nadu ,Nemily ,
× RELATED போலி ஆதார் கார்டு தயாரித்து...